
கொரோனா தொற்றுடையவர்களை விட அதிகமான பிரித்தானியர்களுக்கு தற்போது தடுப்பூசி
கடந்த வெள்ளிக்கிழமை (15 /01 /2021 ) வரை 3,559,179 பிரித்தானிய மக்களுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. இந்த எண்ணிக்கையானது இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை விட 201,818 அதிகம் எனவும் அறியப்படுகின்றது.
இன்று 16 /01 / 2021 மேலதிகமாக 41,346 நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் பிரித்தானியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இப்போது 3,357,361 ஆக உயர்ந்துள்ளது

கொரோனாவுக்கு எதிரான நோய் தடுப்பு முனைப்பில் நேற்றுமட்டும் 324,233 தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பது 24 மணிநேரத்தில் வழங்கப்பட்ட அதிக்கூடிய தடுப்பூசிகளாக கணிப்பிடப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி முன்னுரிமை பட்டியலில் முதல் 4 குழுக்களில் இருக்கும் மக்கள் உள்ளடங்கலாக 13 .9 மில்லியன் பிரித்தானியர்களுக்கு பிப்ரவரி 15 க்கு முன்பாக தடுப்பூசி வழங்கும் இலக்கு நிறைவுக்கு வரும் எனவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் டிசம்பர் 8 முதல் ஜனவரி 15 வரை 3,514,385 தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் 3,090,058 முதலாவது தடுப்பூசி எனவும் 424,327 இரண்டாவது தடுப்பூசி எனவும் தேசிய சுகாதார சேவைகளின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இத்தோடு வட அயர்லாந்தில் 137,380 தடுப்பூசிகளும், ஸ்காட்லாந்தில் 228,௧௭௧ தடுப்பூசிகளை, வேல்ஸில் 126,504 தடுப்பூசிகளும் இதுவரை வழங்கப்பட்டிருப்பதாக அறியப்படுகின்றது.
நன்றி சன்
Read More