SLC

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அதிருப்தி

இந்த குற்றச்சாட்டுகள் சில வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வுக் குழு அதிகாரிகள் மற்றும் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் அணியின் சில பிரிவுகளுக்கு பணிபுரியும் அதிகாரிகளை இலக்காகக் கொண்டவை என்றாலும், அதை திட்டவட்டமாக மறுத்த இலங்கை கிரிக்கெட், இவை உண்மைக்கு புறம்பானவை என்றும், எந்தவொரு தரப்பினராலும் புனையப்பட்ட தவறான தகவல் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் பல இனங்களை கொண்டு விளங்கும் ஒரே விளையாட்டு கிரிக்கெட். ஏனென்றால், கிரிக்கெட் ஒவ்வொரு இலங்கையினதும் அழியாத விளையாட்டாகவும், நாடுகளின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விளையாட்டாகவும் மாறிவிட்டது.
எனவே இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ கருப்பொருள் கூட மரியாதைக்குரிய அடையாளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு நினைவூட்ட இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம்.
நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ஒரு அணி ஒரு நாடு’ (One Team One Nation) என்பது இலங்கை கிரிக்கெட்டின் குறிக்கோள்.
துரதிர்ஷ்டவசமாக, இலங்கை கிரிக்கெட்டைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இத்தகைய கம்பீரமான இடத்தில் கூறுபவர்கள் மறந்துவிட்டார்கள். எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம்.
1996 ஆம் ஆண்டில் நாங்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்றபோதும், 2014 இல் டி 20 உலகக் கிண்ணத்தை வென்றபோதும்,பல சந்தர்ப்பங்களில் நாங்கள் உலக ரன்னர்-அப் ஆனபோதும், ஐந்து முறை ஆசிய கிண்ணத்தை வென்றபோதும்அனைத்து இலங்கையர்களின் அன்பையும் பாசத்தையும் உணர்ந்தோம்.
அந்த அன்பு மற்றும் பாசத்திலிருந்து, அனைத்து தரப்பு வீரர்களுக்கும் எந்தவிதமான பாகுபாடும் இன்றி இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்க இலங்கை கிரிக்கெட் கதவைத் திறந்துள்ளது.
இனம், நிறம், மதம் அல்லது தோற்றம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், கிரிக்கெட் அனைவருக்கும் சமமாக அனுபவிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் எப்போதும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) பாகுபாடுகளுக்கு எதிரான கொள்கையை கடைபிடித்து வருவதை சுட்டிக்காட்ட இந்த வாய்ப்பை நான் பயன்படுத்த விரும்புகிறேன்.
இலங்கை ஜனநாயக சோசலிச மக்கள் அரசாங்கத்தின் அரசியலமைப்பால் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கு விருப்பமான மதத்தை பின்பற்றுவதற்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை இலங்கை கிரிக்கெட் மிகவும் மதிக்கிறது.
எந்த நேரத்திலும் அவர் அல்லது அவள் விளையாட்டில் எந்தவொரு செயலிலும் எந்த மதத்தையும் நம்பிக்கையையும் கூறவில்லை. கிரிக்கெட். இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.
எனவே, இலங்கை கிரிக்கெட் என்பது எந்தவொரு மதக் குழுவின் நிகழ்ச்சி நிரலையும் பின்பற்றாத ஒரு நிறுவனம் என்பதை இலங்கை கிரிக்கெட்டை நினைவுபடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளது.

நன்றி வீரகேசரி

Read More

இவ்வருட இசைச் சமர் வரும் மார்ச் 14 ஆம் திகதி இடம்பெறும்

பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளுக்கு கரம் கொடுக்க வருடாவருடம் நடை பெறும் இசை சமர் 2017 ,2018 ,2019 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றது .

இந்த ஆண்டு ( 2020 ) வரும் மார்ச் 14 ஆம் திகதி 26 போட்டியாளர்கள் பங்குபற்றலுடன் இலண்டனில் இடம்பெறவுள்ளது .

இந்த போட்டிமூலைம் இசை கலைஞர்கள் ஊக்கப்படுத்தப்படுவதுடன் பாதிக்கப்படடவர்களுக்கும் நன்மை ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது .

Read More
TPS 2018

20 நிமிடம் எமக்காக இதைப்பாருங்கள் – Tamil Para Sports

தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா ஒரு திருவிழாதான். மகிழ்வான இந்த விழா மாற்றுத்திறனாளிகளினால் நடாத்தப்படுகின்றது.

நாங்கள் வலியோடு வாழப்பழகியவர்கள், பல சாதனையாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள். மகிழ்ச்சிதான் சாதிக்கத்துடிக்கும் திறனாளிகள் சார்பாகத்தான் பேசுகின்றேன்.

ஆனாலும் , உழைக்கும் வலுவும் இழந்து , உதவிகளும் அற்று தெருவோரம் யாசித்து நிற்கும் மாற்றுத்திறனாளிகளும் எம் சமூகத்தில் இன்னமும் இருக்கிறார்கள் , அழுத்தப்புண்ணும் , மனப்புண்ணும் ஆற்றொணாத்துயரமாய், ஊணோடு உயிரை உருக்க, அழுந்தி அழுந்தி மாண்டு போகும் திறனாளிகளுக்காகவும் நான் இங்கு பேசுகின்றேன்.

இன்னமும் பேச வேண்டும்

Read More

வியோம் மித்ரா: விண்ணுக்கு செல்லவுள்ள இந்தியாவின் பெண் ரோபோ என்ன செய்யும்?

ககன்யான் திட்டத்தில் வீரர்களை அனுப்புவதற்கு முன்னதாக வியோம் மித்ரா விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது.

பெங்களூருவில் விண்வெளி பயணம் மற்றும் ஆய்வில் உள்ள தற்போதைய சவால்கள் மறும் எதிர்கால போக்குகள் என்னும் தலைப்பில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் வியோம் மித்ரா(வியோம் என்றால் சமஸ்கிருதத்தில் சொர்க்கம் என்று பொருள், மித்ரா என்றால் நண்பர்) அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

“விண்கலத்தின் முக்கிய செயல்பாடுகளை கண்காணிப்பேன். உயிர் பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொள்வதோடு, அது தொடர்பான முன்னெச்சரிக்கைகளையும் வழங்குவேன். நான் உங்கள் துணையாக இருப்பேன். விண்வெளி வீரர்களைக் கண்டறிந்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பேன்,” என்றது வியோம் மித்ரா.

“வியோம் மித்ரா விண்வெளி வீரர்களின் சந்தேகங்களை தீர்க்கும். இது விண்வெளி வீரர்களிடம் பேசி அவர்களின் தோழியாக இருக்கும். ‘அலெக்சா’ போன்று உளவியல் தொடர்பான விஷயங்களையும் இது கையாளும்,” என்கிறார் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் எஸ்.சோம்நாத்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் கே.சிவன், “ஆளில்லா விண்வெளி திட்டத்தில், சுற்றுச்சூழல் தொடர்பான பயன்பாட்டு அமைப்புகளை சோதனை செய்ய வியோம் மித்ரா ரோபோ பயன்படுத்தப்படும். மேலும் விண்வெளி வீரர்கள் செய்வதை இது செய்யும்,” என பிபிசியிடம் தெரிவித்தார்.

“மாநாட்டில் காட்சிப்படுத்திய முதல்கட்ட திட்ட வடிவமைப்பு, உருவாக்க நிலையிலேயே உள்ளது. மேலும் இதில் பல அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும். குரல்களை அடையாளம் கண்டுகொண்டு சில நடவடிக்கைகள் எடுக்கும் வகையில் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படும்,” என்று தெரிவித்துள்ளார் சோம்நாத்.

“இந்த ரோப்போக்களின் தோற்றம் வித்தியாசப்படலாம். ஆனால் இதற்கான அமைப்பு ஒரே மாதிரியானதாக இருக்கும். தற்போது எத்தனை உற்பத்தி செய்யப்படும் என்பதை கூற இயலாது. இந்த ரோபோக்கள், எதிர்காலத்தில் மனிதர்களுக்கு உதவி புரியும் வகையில் இருக்கும்,” என்கிறார் சோம்நாத்.

இந்திய விமானப்படையை சேர்ந்த நான்கு விமானிகளை தேர்வு இஸ்ரோ செய்துள்ளது. ககன்யான் திட்டத்திற்காக அனைவரும் தற்போது ரஷ்யாவில் பயற்சி எடுத்து கொண்டு வருகின்றனர்.

“இந்த ககன்யான் திட்டம் மூன்று கட்டங்களாக நடைபெறும்; டிசம்பர் 2020 மற்றும் 2021 ஜூன் மாதம் இரண்டு ஆளில்லா விண்கலங்கள் செலுத்தப்படும். அதனை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்,” என்று சிவன் இந்த கருத்தரங்கில் தெரிவித்தார்.

புதிய விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து மனித செயல்பாடுகள் அதிகரிப்பதையும் நாங்கள் இலக்காக வைத்திருக்கிறோம்.

(நன்றி பிபிசி தமிழ்)

Read More
DATA அமைப்பின்

DATA அமைப்பின், பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு

பாதிக்கப்பட்டோருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் ஒரு புரிதல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் அடிப்படையில் எதை வேண்டி நிற்கிறார்கள் என்ற விடயத்தை ஆராயும் பொருட்டு DATA அமைப்பினால் ஒழுங்கு படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் உடனான கலந்துரையாடல் யாழ் நகர் Green Grass Hotel Tulip Hall சனிக்கிழமை நடைபெற்றது.

போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் சுயமதிப்பீட்டு மாநாடு பாதிக்கப்பட்டோர் பதின்மம் கழிந்தும் என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. மாநாடும் அதன் பின்னரான செயற்பாடுகளையும், DATA அமைப்பின் நோக்கங்கள் செயல்பாடுகளை விளக்கும் நோக்கோடும் இந்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டது.

வட மாகாணத்தில் மட்டும் 20,011 மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக சமூக சேவைத் திணைக்களம் கணக்கிட்டு வெளியிட்டுள்ளது என்ற தகவலை DATA அமைப்பு பகிர்ந்ததோடு இந்த மாற்றுத்திறனாளிகள் இன்னமும் பத்து வருடங்களில் எந்த நிலையில் வாழப் போகிறார்கள் என்று நாங்கள் சிந்திக்கத் தலைப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தது.

மாற்றுத்திறனாளிகளை போல் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், போரில் பெற்றோரை இழந்த சிறுவர்கள், போரினால் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் ஆகியோரின் விதிகளை இன்னும் 10 வருடங்களில் அவரது வாழ்வியல் எவ்வாறு இருக்கப் போகின்றது என்றும் நாங்கள் சிந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் போது சிரேஸ்ர பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக சேவை திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்டோர் குறித்தான பரந்த புரிதலோடு அவர்களுடைய அபிலாசைகளையும், அவர்களுக்குரிய தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு பாதிக்கப்பட்டோரோடு நாங்கள் அனைவரும் இணைந்து பயணிப்பது பற்றி ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்து, இனிவரும் காலங்களில் தங்களது பணிகளையும், இவர்களுக்கான சேவையினையும் இன்னும் விரிவுபடுத்துவதற்காக அவர்கள் முன் வந்தமைக்கு தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு – DATA நன்றி பாராட்டுகிறது.

Read More