ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார்.

Dominic Jeeva

யாழ்ப்பாணம்: ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும் பதிப்பாளருமான மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா (வயது 94) காலமானார். இலங்கை யாழ்ப்பாணத்தில் 1927-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி அவிராம்பிள்ளை ஜோசப்- மரியம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை யாழ்ப்பாணத்தில் அப்போது முடித்திருத்தகம் நடத்தி வந்தார்.

ஈழத்து நவீன இலக்கியத்துறையில் 1946-ல் நுழைந்தார் டொமினிக் ஜீவா. அப்போது தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமறைவாக இருந்த காலம். ப. ஜீவானந்தம் யாழ்ப்பாணத்துக்கு சென்ற போது அவருடன் இணைந்து கொண்டார் டொமினிக் ஜீவா. அதுவரை டொமினிக் என்ற இயற்பெயருடன் ஜீவாவையும் இணைத்துக் கொண்டார்.

1960ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட ‘தண்ணீரும் கண்ணீரும்’ சிறுகதை நூல் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றது.

தண்ணீரும் கண்ணீரும்

1966-ல் மல்லிகை இதழை டொமினிக் ஜீவா தொடங்கினார். நவீன தமிழ் இலக்கிய இதழாக வெற்றிகரமாக மல்லிகை இதழை நடத்தினார் டொமினிக் ஜீவா. சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று மாஸ்கோ சென்று திரும்பினார் டொமினிக் ஜீவா. எண்ணற்ற தமிழ் நூல்களை இந்த சமூகத்துக்கு படைத்து தந்தவர் டொமினிக் ஜீவா.

1960ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட ‘தண்ணீரும் கண்ணீரும்’ சிறுகதை நூல் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றது.

இலங்கையில் முதல் சாகித்திய விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்ற டொமினிக் ஜீவா, மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், தனது சுயசரிதையை இரண்டு பாகங்களாகவும் எழுதி வெளியிட்டுள்ளார்.

முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் டொமினிக் ஜீவா 28/01/2021 வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் படைப்புலக ஆளுமைகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.