ரோஜாப் பூக்களின் நிறங்களும்… அதன் அர்த்தங்களும்…

காதலர் தினம் வரப் போகிறது. பாரம்பரியமாக காதலர் தினத்தன்று நாம் கொடுத்து வரும் ஓர் அன்பு பரிசு தான் ரோஜாப் பூக்கள். மேலும் இந்த ரோஜாப்பூக்களில் பல்வேறு நிறங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு அர்த்தத்தை வெளிப்படுத்தும்.

அதாவது ஒவ்வொரு நிறமும் கொடுப்பவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும். எப்படி சிவப்பு நிற ரோஜாப் பூக்கள் காதல் மற்றும் ரொமான்ஸை வெளிப்படுத்துகிறதோ, அதேப் போல் மஞ்சள் மற்றும் பிங்க் நிற ரோஜாப் பூக்களும் ஓர் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளன. இங்கு எந்த நிற ரோஜாப்பூக்கள் என்ன மாதிரியான அர்த்தத்தைக் கொண்டுள்ளன என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, காதலர் தினத்தன்று உங்களது உணர்வுகளை ரோஜாப் பூக்களின் மூலம் தெரிவியுங்கள்.

காதலர் தினத்தன்று உங்களது உணர்வுகளை ரோஜாப் பூக்களின் மூலம் தெரிவியுங்கள்.

சிவப்பு ரோஜாப்பூ
சிவப்பு ரோஜாப்பூ நீங்கள் அவர்கள் மீது காதலில் உள்ளீர்கள் என்பதை வெளிக்காட்டும். எனவே நீங்கள் யாரையேனும் காதலித்தால், அவர்களுக்கு சிவப்பு ரோஜாவைக் கொடுங்கள்.

வெள்ளை ரோஜாப்பூ
வெள்ளை ரோஜாப்பூ உங்கள் குற்றமற்ற மனதை வெளிக்காட்டும். அதிலும் உங்கள் காதலன்/காதலி வெகு தொலைவில் இருந்து, நீங்கள் அவர்களது பிரிவால் தவிக்கிறீர்கள் என்றால் காதலர் தினத்தன்று வெள்ளை ரோஜாப்பூவைக் கொடுங்கள்.

பிங்க் நிற ரோஜாப்பூ
பிங்க் நிற ரோஜாப்பூ கருணை, கனிவு மற்றும் நன்றியை தெரிவிக்கும். மேலும் இது காதலின் ஆரம்ப காலத்தில் நீங்கள் எப்படி உங்கள் துணையைக் காதலித்தீர்களோ, அதே காதலில் இன்றும் இருந்தால், பிங்க் நிற ரோஜாப்பூக்களைக் கொடுங்கள்.

பர்கண்டி நிற ரோஜாப்பூ
அழகை வெளிப்படுத்த பர்கண்டி நிற ரோஜாப்பூக்களைக் கொடுங்கள். அதாவது காதலர் தினத்தன்று உங்கள் காதலியின் அழகை வர்ணிப்பதை இந்த வண்ண ரோஜாப்பூவைக் கொடுத்து அசத்துங்கள்.

ஆரஞ்சு நிற ரோஜாப்பூ
ஆரஞ்சு நிற ரோஜாப்பூ உங்களின் உற்சாகம் மற்றும் விருப்பத்தை வெளிக்காட்டும். எனவே உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பானதாக உள்ளது என்பதை ஆரஞ்சு நிற ரோஜாப்பூக்களை காதலர் தினத்தன்று உங்கள் காதலிக்கு கொடுங்கள்.

மஞ்சள் நிற ரோஜாப்பூ
மஞ்சள் நிற ரோஜாப்பூ நட்பை வெளிக்காட்டும். காதலர் தினம் காதலர்களுக்கு மட்டுமல்ல நண்பர்களுக்கும் தான். எனவே உங்கள் நட்பை வெளிக்காட்ட நினைத்தால், மஞ்சள் நிற ரோஜாப்பூவைக் கொடுங்கள்.

நன்றி Bold Sky