வாட்ஸ்அப் சர்ச்சை… மே வரை ப்ரைவஸியில் மாற்றம் இல்லையாம்… ஏன் தெரியுமா?!

Whatsapp Privacy

வாட்ஸ்அப் அதன் ப்ரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாகச் சமீபத்தில் அறிவித்தது. இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது எனப் பயனர்களுக்கு பாப்-அப் மெசேஜ் ஒன்றைக் கடந்த வாரம் காட்டியது வாட்ஸ்அப். புதிய ப்ரைவசி கொள்கைகளுக்கு ‘Agree’ கொடுக்கவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் வாட்ஸ்அப்பை உங்களால் பயன்படுத்த முடியாது என்றது வாட்ஸ்அப். புதிய ப்ரைவசி கொள்கைகளில் தகவல்களைத் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கின் மற்ற தயாரிப்புகளுடன் பகிர்ந்துகொள்வோம் என வாட்ஸ்அப் சொல்ல மக்கள் பலரும் அதன் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பத்தொடங்கினர்.

 

வாட்ஸ்அப், ஃபேஸ்புக்தடைசெய்யப்பட வேண்டும் என குரல்கள் எழும் அளவுக்கு பிரச்னை பூதாகரமாக வெடித்திருக்கிறது. மொத்த உலகமும் வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக என்ன சேவைகள் இருக்கிறது எனத் தேடஆரம்பித்திருக்கின்றனர். சிக்னல், டெலிகிராம் போன்ற சேவைகள் அபார வளர்ச்சியைக் கண்டிருக்கின்றன. இதைட்த்தொடர்ந்து வாட்ஸ்அப், நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனுப்பப்படும் மெசேஜ்களின் ப்ரைவஸி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது. மாறாக பிசினஸ் கணக்குகளுடன் நடக்கும் உரையாடல் குறித்தே புதிய கொள்கைகள் பேசுகின்றன என்றது வாட்ஸ்அப். புதிய ப்ரைவசி கொள்கை பற்றி அதிகம் கேட்கப்படும் சந்தேகங்களை விளக்க பிரத்யேக பக்கம் ஒன்றையும் தயார் செய்திருந்தது வாட்ஸ்அப். செய்தித்தாள்களில் முழு பக்க விளம்பரங்கள் கொடுத்தது. இருந்தும் வாட்ஸ்அப்பின் புதிய ப்ரைவசி கொள்கைகள் குறித்த சந்தேகப் பார்வை போனதாக இல்லை. குழப்பங்கள் கலைந்தபாடில்லை.

புதிய பிசினஸ் வசதிகளை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது வாட்ஸ்அப். அதற்காகத்தான் அவசர அவசரமாக அதன் ப்ரைவசி கொள்கைகளை மாற்ற முயற்சி செய்துவருகிறது.

இதனால் மே 15-ம் தேதி வரை இந்த புதிய ப்ரைவசி கொள்கைகளை தள்ளிப்போடுவதாக அறிவித்திருக்கிறது வாட்ஸ்அப். புதிய கொள்கைகளுக்கு ‘Agree’ கொடுக்காதவர்கள் பிப்ரவரி 8-ம் தேதிக்கு பிறகும் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கொள்கைகளில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. பிசினஸ் கணக்குகளுடன் பயனர்கள் செய்யும் உரையாடல்கள் ஃபேஸ்புக் சர்வர்களில்தான் சேகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதைத்தான் ஃபேஸ்புக்குடன் பகிரப்போகிறது வாட்ஸ்அப். இது விளம்பரங்கள் காட்டப் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. புதிய பிசினஸ் வசதிகளையும் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது வாட்ஸ்அப். அதற்காகத்தான் அவசர அவசரமாக அதன் பிரைவசி கொள்கைகளை மாற்ற முயற்சி செய்துவருகிறது.

இது குறித்து வாட்ஸ்அப்பின் செய்தி!

“The update includes new options people will have to message a business on WhatsApp, and provides further transparency about how we collect and use data. While not everyone shops with a business on WhatsApp today, we think that more people will choose to do so in the future and it’s important people are aware of these services,”

நன்றி விகடன்