வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் கங்குலி!

Ganguli

நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் சபையின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலிக்கு இன்று வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார்.

கடந்த புதன்கிழமை அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் வந்துள்ளார் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் வைத்தியசாலை  நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இம் மாதத்தின் தொடக்கத்தில் கங்குலி நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் மேற்கொண்டனர். இந்நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இப்போது சிகிச்சை நிறைவடைந்த நிலையில் கங்குலி இன்று வீடு திரும்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.