இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

Covid
நாட்டில் இன்றையதினம் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் இதுவரை 316 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்து.
கொழும்பு, கடுவலை மற்றும் அங்குறுவாதோட்டை பகுதிகளைச் சேர்ந்த மூவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 38, 68 மற்றும் 69 வயதானவர்கள் எனத் தெரிவித்துள்ள அரசாங்க தகவல் திணைக்களம், உயிரிழந்தோரில் 2 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது
இதேவேளை, இன்றையதினம் நாட்டில் 837 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இதுவரை 60174 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நன்றி வீரகேசரி