Author: admin

மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்; மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை…
DATA Charity ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை – 10/04/2021) காலை மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது
போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில், பாதிக்கப்பட்டோர் சார்பாக மலரும் புத்தாண்டில் பின்வரும் மூன்று கோரிக்கைகளை இந்த ஆண்டில் நிறைவேற்றித் தருமாறு அன்போடு வேண்டுகின்றோம் .
- மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம்.
- மாதம் தோறும் பெரிதும் பாதிக்கப்பட்டோருக்கு ரூபா10,000 நிதியுதவி.
- பாதிக்கப்பட்டோர் அமைப்புக்களுக்கு இயங்குவதற்கான உதவிகள்.
அத்தோடு போரின் பின்னரான காலத்தில் பாதிக்கப்பட்டோர் குறித்தான கொள்கை உருவாக்கத்தையும் கோருகின்றோம்.
போர் ஓய்ந்து 12 வருடங்களை கடக்கின்றோம். போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றைய மாகாணங்களிலும் பார்க்க அதிகம்.
பாதிக்கப்பட்டோரின் வாழ்வில் அவர்களின் வலியை ஆற்றுவதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்கும் இலங்கை அரசும், மாகாண அரசுகளும், தொண்டு நிறுவனங்களும், உறவுகளும் ஆற்றிவரும் சேவைகளை நாம் நன்றியோடு நினைவு கூறுகின்றோம்.

இருந்த போதும் எமது தேவைகளில் பல இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளது என்பதை நாம் எமது உறவுகளின் முன் சொல்ல வேண்டியுள்ளதால் இன்று இந்த அறிக்கையை வெளியிடுகின்றோம்.

1.மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாற்றுத்திறனாளிகள் தங்குவதற்கான வசதிகளுடன் கூடிய காப்பகங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும் என்பது எமது நீண்டகால தேவையாக உள்ளது. இன்னொருவரில் முழுமையாக தங்கி வாழ்பவர்கள் பல சந்தர்ப்பங்களில் தமக்கான ஒரு காப்பகங்கள் இல்லை என்று ஏங்குகின்றார்கள். அவ்வாறான காப்பகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும் என கோருகின்றோம்.
2.மாதம் தோறும் பெரிதும் பாதிக்கப்பட்டோருக்கு ரூபா10,000 நிதியுதவி
இன்னொருவரில் பெரிதும் தங்கி வாழ்பவர்களுக்கு குறைந்த பட்சம் ரூபா 10,000 மாதாந்த உதவித் தொகையாக கொடுக்கப்பட வேண்டுமென்று கோருகின்றோம்.
உதாரணமாக,
- முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள்
- இரண்டு கரங்களையும் இழந்தவர்கள்
- பல அங்கங்களை இழந்தவர்கள்
- இரண்டு கண்களையும் இழந்தவர்கள்
- இரண்டு கால்களையும் முற்றாக இழந்தவர்கள்.
- முதுமையில் அநாதைகள் ஆக்கப்பட்டவர்கள்
3.பாதிக்கப்பட்டோர் அமைப்புக்களுக்கு இயங்குவதற்கான உதவிகள்
கிராமங்களை மையப்படுத்தி இயங்கி வரும் பாதிக்கப்பட்டோர் அமைப்புகளுக்கு, அவை தொடர்ச்சியாக இயங்குவதற்கு பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.
சுயமதிப்பீட்டுமாநாடு
பாதிக்கப்பட்டோரும் அவர்களோடு பயணிப்போரும் இணைந்து யாழ்ப்பாணத்தில் 2019ம் ஆண்டு ஓர் சுய மதிப்பீட்டு மாநாட்டை நடாத்தினோம்.
இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பல அமைப்புக்களும், சமூக சேவை திணைக்களங்கள், அரச அதிபர்கள், அவர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அதில் பாதிக்கப்பட்டவர்களை நான்கு பிரிவினர்களாக வகுத்து அந்த மாநாட்டை நடாத்தினோம்.
- மாற்றுத்திறனாளிகள்
- பெற்றோரை இழந்த பிள்ளைகள்
- பிள்ளைகளை இழந்த பெற்றோர் (முதியவர்கள்)
- பெண்தலைமை குடும்பங்கள்
அந்த மாநாட்டில் நாம் எமது கோரிக்கைகளை வகைப்படுத்தி பிரகடணங்களாக வெளிப்படுத்தி இருந்தோம்.
அந்த கோரிக்கைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய கோரிக்கைகளை இந்த வருடத்திலேயே நிறைவேற்றி தருமாறு நாம் கோரி நிற்கின்றோம்.இந்த கோரிக்கைகளை மக்களிடமும், அரச தரப்பினரிடமும் எடுத்துச் செல்ல அனைவரும் உதவ வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றோம்.
http://www.datatamil.com/ta Read More
புதிய வருடம், புதிய நம்பிக்கை, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் தொழிலுக்கு புதிய ஊக்கம்…..
இலங்கையின் வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளாக வாழ்ந்துவருபவர்கள் , வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்கும் பல உதவி திட்டங்களை முன்னெடுத்துவரும் DATA CHARITY அமைப்பினரது மற்றுமொரு மகத்தான பணி
போரினால் அங்கங்களை இழந்து, குடும்ப துணையை இழந்து வலியோடு வாழ்வோர் தம் வாழ்வுக்காக முன்னெடுக்கும் தொழிலில் நாமும் ஒரு பங்காளராக இருப்போம்.
போரைத்தாண்டி… இன்று கொரோனா….
மீண்டும் மீண்டும் வாடும் நம் உறவுகள்.
இரு கைகளை இழந்தவர் கடை நடாத்துகின்றார்.
கழுத்துக்கு கீழ் இயக்கமற்றவர் கடை நடாத்துகின்றார் ஒரு முதலாளியாக……
காலை இழந்தவர் கமம் செய்கின்றார்.
பொய்க்காலோடு நின்று சலூன் நடாத்துகின்றார்.
சுமக்க முடியாமல் சுமக்கிறார்கள் தம் குடும்பத்துக்காக……
நாம் ஏற்கனவே பாதிக்கப்பட்டோரில் சிலரது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கின்றோம். அவர்கள் தங்களது முயற்சியை பலப்படுத்தி வந்து கொண்டிருக்கின்றார்கள். அதனை எங்கள் இணையத்தில் www.datatamil.com காணலாம்

வருடம் ஒரு குடும்பத்துக்கு ஒளியேற்றுங்கள் – ஒளியின் விலை : £200 (ஒரு வருடத்துக்கு)
அது தரும் பிரகாசம் ஒரு குடும்பத்திற்கு வாழ்வு. இவர்கள் வாழ்வில் நீங்களும் உங்கள் அன்பை பகிருங்கள்
உங்கள் அன்பை பகிர – http://virginmoneygiving.com/fund/2021
இந்த வருடம் 100 பேரினது தொழில் முயற்சியை வழப்படுத்த, ரூபா 50,000 சுழற்சி முறை மேம்பாட்டு திட்டமாக வழங்கப்படும். அவர்கள் தங்கள் தொழிலை வளப்படுத்தி முன்னேறும் சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் உதவிகளை பெறலாம்.
வலியாற்றுதல் – Palliative care
அதேவேளை வலியோடு வாடுவோருக்கும் அவர்களில் வலியாற்றுதலில் பங்கெடுக்க, உழைக்கும் வலு முற்றாக இழந்து, மீளா நோயில் வாழ்வு மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு அவர்களின் வலியை ஆற்ற அவர்களுக்கு உதவியாக, ஊட்ட உணவுக்காக, வைத்திய சாலை போக்குவரத்து செலவுக்காக மாதம் ரூபா 5000 வழங்குவோம். வருட நிதி: £250 (ரூபா.60,000)
இந்த இணைய வழியாக வலியாற்றுங்கள். – http://virginmoneygiving.com/fund/2021
(நன்கொடையாளர்கள் பயனாளிகளோடு www.datatamil.com வழியாக தொடர்பில் இருக்கலாம்)
பாதிக்கப்பட்டோர் சமூகம் தங்கி வாழ்தலில் இருந்து விடுதலை அடையட்டும்.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்
நாட்டில் இன்றையதினம் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. | |
அதன்படி இலங்கையில் இதுவரை 316 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்து. | |
கொழும்பு, கடுவலை மற்றும் அங்குறுவாதோட்டை பகுதிகளைச் சேர்ந்த மூவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். | |
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 38, 68 மற்றும் 69 வயதானவர்கள் எனத் தெரிவித்துள்ள அரசாங்க தகவல் திணைக்களம், உயிரிழந்தோரில் 2 பெண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது | |
இதேவேளை, இன்றையதினம் நாட்டில் 837 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இதுவரை 60174 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி |

ரோஜாப் பூக்களின் நிறங்களும்… அதன் அர்த்தங்களும்…
காதலர் தினம் வரப் போகிறது. பாரம்பரியமாக காதலர் தினத்தன்று நாம் கொடுத்து வரும் ஓர் அன்பு பரிசு தான் ரோஜாப் பூக்கள். மேலும் இந்த ரோஜாப்பூக்களில் பல்வேறு நிறங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு அர்த்தத்தை வெளிப்படுத்தும்.
அதாவது ஒவ்வொரு நிறமும் கொடுப்பவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும். எப்படி சிவப்பு நிற ரோஜாப் பூக்கள் காதல் மற்றும் ரொமான்ஸை வெளிப்படுத்துகிறதோ, அதேப் போல் மஞ்சள் மற்றும் பிங்க் நிற ரோஜாப் பூக்களும் ஓர் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளன. இங்கு எந்த நிற ரோஜாப்பூக்கள் என்ன மாதிரியான அர்த்தத்தைக் கொண்டுள்ளன என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, காதலர் தினத்தன்று உங்களது உணர்வுகளை ரோஜாப் பூக்களின் மூலம் தெரிவியுங்கள்.
காதலர் தினத்தன்று உங்களது உணர்வுகளை ரோஜாப் பூக்களின் மூலம் தெரிவியுங்கள்.
சிவப்பு ரோஜாப்பூ
சிவப்பு ரோஜாப்பூ நீங்கள் அவர்கள் மீது காதலில் உள்ளீர்கள் என்பதை வெளிக்காட்டும். எனவே நீங்கள் யாரையேனும் காதலித்தால், அவர்களுக்கு சிவப்பு ரோஜாவைக் கொடுங்கள்.
வெள்ளை ரோஜாப்பூ
வெள்ளை ரோஜாப்பூ உங்கள் குற்றமற்ற மனதை வெளிக்காட்டும். அதிலும் உங்கள் காதலன்/காதலி வெகு தொலைவில் இருந்து, நீங்கள் அவர்களது பிரிவால் தவிக்கிறீர்கள் என்றால் காதலர் தினத்தன்று வெள்ளை ரோஜாப்பூவைக் கொடுங்கள்.
பிங்க் நிற ரோஜாப்பூ
பிங்க் நிற ரோஜாப்பூ கருணை, கனிவு மற்றும் நன்றியை தெரிவிக்கும். மேலும் இது காதலின் ஆரம்ப காலத்தில் நீங்கள் எப்படி உங்கள் துணையைக் காதலித்தீர்களோ, அதே காதலில் இன்றும் இருந்தால், பிங்க் நிற ரோஜாப்பூக்களைக் கொடுங்கள்.
பர்கண்டி நிற ரோஜாப்பூ
அழகை வெளிப்படுத்த பர்கண்டி நிற ரோஜாப்பூக்களைக் கொடுங்கள். அதாவது காதலர் தினத்தன்று உங்கள் காதலியின் அழகை வர்ணிப்பதை இந்த வண்ண ரோஜாப்பூவைக் கொடுத்து அசத்துங்கள்.
ஆரஞ்சு நிற ரோஜாப்பூ
ஆரஞ்சு நிற ரோஜாப்பூ உங்களின் உற்சாகம் மற்றும் விருப்பத்தை வெளிக்காட்டும். எனவே உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பானதாக உள்ளது என்பதை ஆரஞ்சு நிற ரோஜாப்பூக்களை காதலர் தினத்தன்று உங்கள் காதலிக்கு கொடுங்கள்.
மஞ்சள் நிற ரோஜாப்பூ
மஞ்சள் நிற ரோஜாப்பூ நட்பை வெளிக்காட்டும். காதலர் தினம் காதலர்களுக்கு மட்டுமல்ல நண்பர்களுக்கும் தான். எனவே உங்கள் நட்பை வெளிக்காட்ட நினைத்தால், மஞ்சள் நிற ரோஜாப்பூவைக் கொடுங்கள்.
நன்றி Bold Sky
Read More
வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் கங்குலி!
நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் சபையின் தலைவரும், இந்திய அணியின் முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலிக்கு இன்று வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார்.
கடந்த புதன்கிழமை அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் வந்துள்ளார் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இம் மாதத்தின் தொடக்கத்தில் கங்குலி நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் மேற்கொண்டனர். இந்நிலையில் அவருக்கு இரண்டாவது முறையாக அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இப்போது சிகிச்சை நிறைவடைந்த நிலையில் கங்குலி இன்று வீடு திரும்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Read More
இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அதிருப்தி
இந்த குற்றச்சாட்டுகள் சில வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வுக் குழு அதிகாரிகள் மற்றும் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிக்கெட் அணியின் சில பிரிவுகளுக்கு பணிபுரியும் அதிகாரிகளை இலக்காகக் கொண்டவை என்றாலும், அதை திட்டவட்டமாக மறுத்த இலங்கை கிரிக்கெட், இவை உண்மைக்கு புறம்பானவை என்றும், எந்தவொரு தரப்பினராலும் புனையப்பட்ட தவறான தகவல் என்றும் குறிப்பிட்டுள்ளது. | |
இலங்கையில் பல இனங்களை கொண்டு விளங்கும் ஒரே விளையாட்டு கிரிக்கெட். ஏனென்றால், கிரிக்கெட் ஒவ்வொரு இலங்கையினதும் அழியாத விளையாட்டாகவும், நாடுகளின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விளையாட்டாகவும் மாறிவிட்டது. | |
எனவே இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ கருப்பொருள் கூட மரியாதைக்குரிய அடையாளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு நினைவூட்ட இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம். | |
நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ஒரு அணி ஒரு நாடு’ (One Team One Nation) என்பது இலங்கை கிரிக்கெட்டின் குறிக்கோள். | |
துரதிர்ஷ்டவசமாக, இலங்கை கிரிக்கெட்டைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இத்தகைய கம்பீரமான இடத்தில் கூறுபவர்கள் மறந்துவிட்டார்கள். எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம். | |
1996 ஆம் ஆண்டில் நாங்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்றபோதும், 2014 இல் டி 20 உலகக் கிண்ணத்தை வென்றபோதும்,பல சந்தர்ப்பங்களில் நாங்கள் உலக ரன்னர்-அப் ஆனபோதும், ஐந்து முறை ஆசிய கிண்ணத்தை வென்றபோதும்அனைத்து இலங்கையர்களின் அன்பையும் பாசத்தையும் உணர்ந்தோம். | |
அந்த அன்பு மற்றும் பாசத்திலிருந்து, அனைத்து தரப்பு வீரர்களுக்கும் எந்தவிதமான பாகுபாடும் இன்றி இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்க இலங்கை கிரிக்கெட் கதவைத் திறந்துள்ளது. | |
இனம், நிறம், மதம் அல்லது தோற்றம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், கிரிக்கெட் அனைவருக்கும் சமமாக அனுபவிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் எப்போதும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) பாகுபாடுகளுக்கு எதிரான கொள்கையை கடைபிடித்து வருவதை சுட்டிக்காட்ட இந்த வாய்ப்பை நான் பயன்படுத்த விரும்புகிறேன். | |
இலங்கை ஜனநாயக சோசலிச மக்கள் அரசாங்கத்தின் அரசியலமைப்பால் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கு விருப்பமான மதத்தை பின்பற்றுவதற்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை இலங்கை கிரிக்கெட் மிகவும் மதிக்கிறது. | |
எந்த நேரத்திலும் அவர் அல்லது அவள் விளையாட்டில் எந்தவொரு செயலிலும் எந்த மதத்தையும் நம்பிக்கையையும் கூறவில்லை. கிரிக்கெட். இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறோம். | |
எனவே, இலங்கை கிரிக்கெட் என்பது எந்தவொரு மதக் குழுவின் நிகழ்ச்சி நிரலையும் பின்பற்றாத ஒரு நிறுவனம் என்பதை இலங்கை கிரிக்கெட்டை நினைவுபடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளது.
நன்றி வீரகேசரி |

15 வருடகால ஐ.சி.சி. நடுவர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆக்ஸன்போர்ட்

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார்.
யாழ்ப்பாணம்: ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும் பதிப்பாளருமான மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா (வயது 94) காலமானார். இலங்கை யாழ்ப்பாணத்தில் 1927-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி அவிராம்பிள்ளை ஜோசப்- மரியம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை யாழ்ப்பாணத்தில் அப்போது முடித்திருத்தகம் நடத்தி வந்தார்.
ஈழத்து நவீன இலக்கியத்துறையில் 1946-ல் நுழைந்தார் டொமினிக் ஜீவா. அப்போது தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமறைவாக இருந்த காலம். ப. ஜீவானந்தம் யாழ்ப்பாணத்துக்கு சென்ற போது அவருடன் இணைந்து கொண்டார் டொமினிக் ஜீவா. அதுவரை டொமினிக் என்ற இயற்பெயருடன் ஜீவாவையும் இணைத்துக் கொண்டார்.
1960ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட ‘தண்ணீரும் கண்ணீரும்’ சிறுகதை நூல் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றது.
1966-ல் மல்லிகை இதழை டொமினிக் ஜீவா தொடங்கினார். நவீன தமிழ் இலக்கிய இதழாக வெற்றிகரமாக மல்லிகை இதழை நடத்தினார் டொமினிக் ஜீவா. சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று மாஸ்கோ சென்று திரும்பினார் டொமினிக் ஜீவா. எண்ணற்ற தமிழ் நூல்களை இந்த சமூகத்துக்கு படைத்து தந்தவர் டொமினிக் ஜீவா.
1960ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட ‘தண்ணீரும் கண்ணீரும்’ சிறுகதை நூல் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றது.
இலங்கையில் முதல் சாகித்திய விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்ற டொமினிக் ஜீவா, மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், தனது சுயசரிதையை இரண்டு பாகங்களாகவும் எழுதி வெளியிட்டுள்ளார்.
முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் டொமினிக் ஜீவா 28/01/2021 வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் படைப்புலக ஆளுமைகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Read More
கொரோனா தொற்றுடையவர்களை விட அதிகமான பிரித்தானியர்களுக்கு தற்போது தடுப்பூசி
கடந்த வெள்ளிக்கிழமை (15 /01 /2021 ) வரை 3,559,179 பிரித்தானிய மக்களுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. இந்த எண்ணிக்கையானது இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை விட 201,818 அதிகம் எனவும் அறியப்படுகின்றது.
இன்று 16 /01 / 2021 மேலதிகமாக 41,346 நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் பிரித்தானியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இப்போது 3,357,361 ஆக உயர்ந்துள்ளது

கொரோனாவுக்கு எதிரான நோய் தடுப்பு முனைப்பில் நேற்றுமட்டும் 324,233 தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பது 24 மணிநேரத்தில் வழங்கப்பட்ட அதிக்கூடிய தடுப்பூசிகளாக கணிப்பிடப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி முன்னுரிமை பட்டியலில் முதல் 4 குழுக்களில் இருக்கும் மக்கள் உள்ளடங்கலாக 13 .9 மில்லியன் பிரித்தானியர்களுக்கு பிப்ரவரி 15 க்கு முன்பாக தடுப்பூசி வழங்கும் இலக்கு நிறைவுக்கு வரும் எனவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் டிசம்பர் 8 முதல் ஜனவரி 15 வரை 3,514,385 தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் 3,090,058 முதலாவது தடுப்பூசி எனவும் 424,327 இரண்டாவது தடுப்பூசி எனவும் தேசிய சுகாதார சேவைகளின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இத்தோடு வட அயர்லாந்தில் 137,380 தடுப்பூசிகளும், ஸ்காட்லாந்தில் 228,௧௭௧ தடுப்பூசிகளை, வேல்ஸில் 126,504 தடுப்பூசிகளும் இதுவரை வழங்கப்பட்டிருப்பதாக அறியப்படுகின்றது.
நன்றி சன்
Read More